பட்டுக்கோட்டையார் பற்றி தமிழக முதலமைச்சர் கலைஞர்
இவ்வுலகில் 29 ஆண்டு காலம் மட்டுமே வாழ்ந்து – என்றும் நிலைத்து நிற்கும் எளிய பாடல்கள் மூலம் சமுதாயப் பிரச்சினைகளைப் பாடி, மக்கள் நெஞ்சங்களில் நிறைந்து – இணையிலாப் புகழ் படைத்த இனிய கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்! (மேலும்)
முத்திரை பதித்த முத்திறக் கவிஞர் – முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன்
திரைப்படங்களில் பாரதியார், பாரதிதாசன் பாடல்களுக்கு இசையமைத்து:ப பயன்படுத்தியபோது நாட்டு விடுதலை உணர்வு, சமுதாயச் சிந்தனைகள் பற்றிய கருத்துகள் நல்ல தமிழில் நம் காதுகளில் ஒலிக்கக் கேட்டோம். அவர்களையடுத்து திரைத்துறைப் பாடல்களில் மூன்று முக்கியத் திருப்பங்கள் ஏற்பட்டன. சீர்திருத்த – பகுத்தறிவுப் பாடல்களை எளிய இனிய தமிழில் உடுமலை நாராயணக் கவிஞர் எழுதினார். காதல், வாழ்வியல், தத்துவப் பாக்களை பண்டை இலக்கியப் பாங்கில் பாடியளித்தார் கவிஞர் கண்ணதாசன். தொழிலாளர் உயர்வையும், பொதுவுடைமைக் கொள்கைகளையும் கவிஞர் கலியாணசுந்தரத்தின் பாடல்கள் முதன்மைப்படுத்தி ஒலித்தன. (மேலும்)